சபரிமலைக்கு பாதயாத்திரை சென்ற ஆந்திர பக்தர்கள்
கூடலுார் : ஆந்திராவில் ருந்து சபரிமலைக்கு நேற்று கூடலுார் வழியாக நுாற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் நடந்து சென்றனர். ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருவார்கள். தில் கூடுதலான பக்தர்கள் எரிமேலி பம்பை வரை வாகனங்களில் செல்வர். து தவிர நீண்ட துாரம் நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்களும் அதிகம்.ந்நிலையில் நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் ருந்து குருசாமி வசந்த் தலைமையில் 210 பேர் கூடலுார் வழியாக நடந்து சென்றனர். குருசாமி வசந்த் கூறும்போது ’நாங்கள் பல ஆண்டுகளாக சபரிமலைக்கு நடந்தே செல்கிறோம். ஆயிரம் கி.மீ. மேல் நடந்து வருகிறோம் என்ற எண்ணமே தோன்றவில்லை. வழியில் தங்கி சமையல் செய்து சாப்பிட்டு ஓய்வெடுத்த பின் மீண்டும் கிளம்புவோம். நவ. 1 ல் ஆந்திராவில் ருந்து புறப்பட்டோம். நாளை அல்லது நாளை மறுநாள் சபரிமலைக்கு சென்று விடுவோம். தரிசனம் முடிந்து ரயிலில் சொந்த ஊருக்கு திரும்புவோம் ’ ’என்றனர்.