உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கமேஸ்வரர் கோவில் பார்க்கிங் பகுதியில் தார்ச்சாலை இல்லாததால் பக்தர்கள் அவதி

சங்கமேஸ்வரர் கோவில் பார்க்கிங் பகுதியில் தார்ச்சாலை இல்லாததால் பக்தர்கள் அவதி

பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவில் பைக், கார் பார்க்கிங் பகுதியில், தார்ச்சாலை இல்லாததால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர் பவானியில், பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. பின் பகுதியில் காவிரி, பவானி மற்றும் அமுதநதி சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், கூடுதுறை என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. ஐயப்பன் பக்தர்கள் பலர், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநில பக்தர்கள் கார், வேன், பஸ்களில் வந்து, காவிரி ஆற்றில் குளித்த பின், சங்கமேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வர். இந்நிலையில், கோவில் கார் பார்க்கிங் பகுதியில் போடப்பட்டிருந்த சாலை, மிகவும் சேதமடைந்து இருந்தது. இப்பகுதி முழுவதும், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை போடப்படும் என அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக கிரசர் மணல் கலந்த ஜல்லிகள் கொட்டப்பட்டு சமன்படுத்தப்பட்டது. தார்ச்சாலை பணி, முழுமை பெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஐயப்பன் கோவில் சீசன் துவங்கி உள்ளதால், பார்க்கிங் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பக்தர்கள் காலை முதல் இரவு வரை வந்து செல்கின்றனர். கிரசர் மணல் கலந்த ஜல்லி சாலை, பக்தர்களின் பாதங்களை பதம்பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !