வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :2975 days ago
வடமதுரை : வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. திருச்சி ரோடு மங்கம்மாள் கேணியில் இருந்து ஏராளமான பெண்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக தேரோடும் வீதிகளை சுற்றி கோயிலுக்கு வந்தனர். திருமஞ்சனம் மற்றும் பல்வேறு அபிஷேகங்களை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா வந்தார். விழா ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.