கரபுரநாதர் கோவிலில் காலபைரவாஷ்டமி விழா
ADDED :2857 days ago
உத்தமசோழபுரம்: கரபுரநாதர் கோவிலில், நாளை, மகா காலபைரவாஷ்டமி விழா நடக்கிறது. கார்த்திகையில் வரும் தேய்பிறை அஷ்டமியில், காலபைரவர் அவதரித்த திருநட்சத்திரம் வருவதால், மகா காலபைரவாஷ்டமி என, கொண்டாடுவர். அதையொட்டி, சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில் உள்ள, காலபைரவருக்கு, அவரின் அவதார தினமான நாளை காலை, சிறப்பு யாக பூஜையுடன் தொடங்கி, மாலை, யாகத்தில் வைக்கப்பட்ட புனிதநீரால் அபி?ஷகம் செய்யப்படும். இரவு, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கும். இதில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை, கோவில் சிவாச்சாரியார்கள், நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.