உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பொலிவு பெறுகிறது கூடலழகர் பெருமாள் தெப்பம்!

புதுப்பொலிவு பெறுகிறது கூடலழகர் பெருமாள் தெப்பம்!

மதுரை: மதுரை டவுன் ஹால் ரோட்டில் உள்ள கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து கடைகள் நடத்துவோர் டிச.,14க்குள் காலி செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில் நாங்களே அகற்றிவிடுவோம் என கோயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இக்குளத்திற்கு முன்பு கிருதுமால் நதிதான் நீராதாரமாக இருந்தது. நகரின் மையப்பகுதியில் தெப்பம் இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருந்தது. நகர் வளர்ச்சியடைந்த போது தெப்பத்தின் கரைகளை சிறுக சிறுக ஆக்கிரமிக்கத்து எலக்ட்ரானிக் கடை உட்பட பல்வேறு கடைகளை நடத்த ஆரம்பித்தனர்.

உயர் நீதிமன்றம் உத்தரவு: தெப்பக்குளம் ஆக்கிரமிப்பு 70 ஆண்டுகளுக்கும்மேலாக தொடர்கிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு தொடர்பாக விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், குளத்தின் புனிதத்தை காக்கவும், தொல்லியியல் துறை மூலம் கலைநயம் மாறாமல் தெப்பத்தை மீண்டும் புனரமைத்து நிரந்தரமாக தண்ணீர் தேக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக, சமீபத்தில் தெப்பத்தின் தெற்கு பகுதி படித்துறையை ஆக்கிரமித்திருந்த 53 கடைகள் அகற்றபட்டன. இதே வரிசையில் 17 காய்கறி கடைகளை கோயில் நிர்வாகம் கடந்த நவ.,20 ல் அகற்றியது. கிழக்கு, வடக்கு, மேற்கு பகுதியில் உள்ள 108 கடைகளை டிச.,14க்குள் காலி செய்யவும், தாமதிக்கும் பட்சத்தில் டிச.,14 மற்றும் 15ல் ஆக்கிரமிப்பு கடைகளை கோயில் நிர்வாகமே அகற்றும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !