சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :3195 days ago
திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். நேற்று தேய்பிறை அஷ்டமி மற்றும் பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் என ஆறு கால பூஜைகள் நடந்தது. கிருஷ்ண சைதன்ய தாஸின் சொற்பொழிவுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.