உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோகனூரில் வரும் 24ல் ராதா கல்யாண மஹோத்ஸவம்

மோகனூரில் வரும் 24ல் ராதா கல்யாண மஹோத்ஸவம்

மோகனூர்: மோகனூர் அக்ரஹாரத்தில் உள்ள, பக்தஜன பஜனசபாவின், 57ம் ஆண்டு, ராதா கல்யாண மஹோத்ஸவ விழா, வரும், 24ல், வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, வரும், 22 காலை, 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பணம், உற்சவம் ஆரம்பம், சஹஸ்ர நாம அர்ச்சனை, மாலை, 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. 23 காலை, 7:00 மணிக்கு கிராம உஞ்சவிருத்தி, சஹஸ்ர நாம அர்ச்சனை, 9:30 மணிக்கு, அஷ்பதி பஜனை இரவு, 7:00 மணிக்கு, சீர் கொண்டு வருதல், மாப்பிள்ளை அழைப்பு நடக்கிறது. 24 காலை, 9:30 மணிக்கு ராதா கல்யாண வைபவம் மாலை, 6:30 மணிக்கு, ராதா மாதவ சுவாமி திருவீதி உலா, இரவு, 8:30 மணிக்கு ஆஞ்சநேயர் உத்ஸவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !