செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ராமபஜனை
ADDED :2863 days ago
செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் கார்த்திகை மாத ராம பஜனை நடந்தது. செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் கார்த்திகை மாத ராம பஜனை நடந்தது. இதை முன்னிட்டு கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலை ராமமூர்த்தி திருமால் துதிபாடினார். அறக்கட்டளை நிர்வாகி துரை பாரதிராஜா முன்னிலை வகித்தார். சபை தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். விழாக் குழுவினர் எட்டியாப்பிள்ளை, சுந்தரம், சாமிக்கண்ணு, பெருமாள், அருணகிரி, அப்புபிள்ளை, கிருஷ்ணவேணி, வேணுகோபால், சுதர்சனம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் செஞ்சி தாலுகாவை சேர்ந்த பாகவதர்கள்,ஆண்டாள் கோஷ்டியினர் கலந்து கொண்டு பஜனை நடத்தினர்.