உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிந்தலவாடி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத குளிர்ச்சி விழா

சிந்தலவாடி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத குளிர்ச்சி விழா

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், கார்த்திகை மாத குளிர்ச்சி திருவிழா சிறப்பாக நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இதில் நேற்று காலை கார்த்திகை மாத குளிர்ச்சி திருவிழா நடத்தப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள் வீடுகளில் மா விளக்கு போட்டு அம்மனுக்கு குளிர்ச்சி பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல, கிருஷ்ணராயபுரம் மூன்றாவது வார்டு மாரியம்மன் கோவிலில் குளிர்ச்சி திருவிழா நடந்தது. இதில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !