உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் உழவாரப்பணி
ADDED :2860 days ago
கீழக்கரை : உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் அடியவருக்கு அடியவர் திருக்கூட்டம் எனும் ஆன்மிக அமைப்பின் சார்பில் உழவாரப்பணி நடந்தது. எட்டையாபுரம், மதுரை, துாத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்த தன்னார்வலர்கள் கோயில் பிரகாரத்தில் வளர்ந்து இருந்த புதர்செடிகளை அகற்றினர். துாத்துக்குடி டி.வி.எஸ்.சண்முகம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சமஸ்தான செயல் அலுவலர் ராமு,பேஷ்கார் ஸ்ரீதர் உடனிருந்தனர். அன்னதானம் நடந்தது.