பொள்ளாச்சியில் பைரவ அஷ்டமி விழா
பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கால பைரவ அஷ்டமி விழா நடந்தது.பொள்ளாச்சி அருகே குருநல்லிபாளையம் ஸ்ரீ கால பைரவர் கோவிலில், பைரவ அஷ்டமி விழா நடந்தது. மாலை, 3:00 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. வேள்வி பூஜை, 108 வலம்புரி சங்கு பூஜையும் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி அடுத்த ஆத்மநாதவனம் சமுக்தியாம்பிகை, காலசம்ஹாரபைரவர் கோவிலில், கால பைரவ அஷ்டமி விழா நடந்தது. விழாவையொட்டி, காலசம்ஹார பைரவருக்கு காலை, 11:00 மணிக்கு, மகா சோடசாபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, மகா தீபாராதனை, பைரவருக்கு, 21 வகையான பொருட்களால் அபிேஷகம் நடந்தது. வாசனை திரவியங்கள் சாற்றப்பட்டு, மந்திரம் உச்சரித்து தீபாராதனை செய்யப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடந்தது. இதில், உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த பக்தர்கள் பூசணி தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டனர்.