தேவகோட்டை சிவன் கோயில்களில் சங்காபிேஷகம்
தேவகோட்டை : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு சங்காபிேஷகம் நடந்தது. தேவகோட்டைநகர மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு ஹோமத்துடன் 1008 சங்காபிேஷகம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி,அம்மன், விநாயகர்,முருகன் சண்டீகேஸ்வரர் பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆதிசங்கரர் கோயிலில் சிவபெருமானுக்கு 1008 சங்காபிேஷகம் நடந்தது. மற்றும் கைலாசநாதர் கோயில், மும்முடிநாதர் கோயில், சிலம்பணிசிதம்பர விநாயகர் கோயில் உட்பட அனைத்து ஆலயங்களிலும் சங்காபிேஷகம் நடந்தது.
செங்கநல்லூர் கோவில் நுழைவாயில் 14ல் திறப்பு
ஆர்.கே.பேட்டை சேனுார் அம்மன் என, அழைக்கப்படும் செங்கநல்லுார் மாரியம்மன் கோவிலில், புதிய நுழைவாயில் திறப்பு விழா, 14ம் தேதி நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, மேல்பந்திகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது புராதன சிறப்பு வாய்ந்த சேனுார் அம்மன் எனப்படும் செங்கநல்லுார் மாரியம்மன் கோவில். இந்த கோவில் புனரமைப்பு பணிகள், இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக, பந்திகுப்பம் - வீரமங் கலம் -- சோளிங்கர் சாலையை ஒட்டி, புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலின் திறப்பு விழா, 14ம் தேதி, நடைபெற உள்ளது. இதற்கான கலச பூஜை நாளை துவங்குகிறது. நாளை, மாலை, 5:00 மணிக்கு, அம்மன் பிரார்த்தனையுடன் வாஸ்து பூஜை துவங்குகிறது. அதை தொடர்ந்து சக்தி யாகம், மகா பூர்ணஹூதி நடக்கிறது. மறுநாள், காலை, 5:00 மணிக்கு, கணபதி பூஜை, அம்மனுக்கு அபிஷேகத்தை தொடர்ந்து, 7:30 மணிக்கு, நுழைவாயிலுக்கு கலச அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.