உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் ஊர்வலம் அமர்க்களம்

ஐயப்பன் ஊர்வலம் அமர்க்களம்

கூடலுார்: கூடலுார், விநாயகர் கோவில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், ஐயப்ப ஆன்மிக ஊர்வலம் மற்றும் லட்சார்ச்சனை பெருவிழா, 9ல் துவங்கியது. அன்று, காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. மாலையில் சிறப்பு பூஜைகள், தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் சார்பில் பஜனையும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம்; 9:00 மணிக்கு கூனம்பட்டி ஆதினம் ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசகர் சுவாமிகள் தலைமையில், 15 சிவாச்சாரியர்கள் பங்கேற்ற யாகம். ஐயப்பனுக்கு லட்சார்ச்சனை பெருவிழா சிறப்பாக நடந்தது.மாலை, 5:00 மணிக்கு, ஐயப்பன் வீதி உலா ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில், புலி மீது அமர்ந்து வந்த ஐயப்பனை, பக்தர்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர்.ஊர்வலம், கூடலுார் நகர் வழியாக, மைசூர் சாலை முன்னீஸ்வர் கோவில் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகளும், ஐயப்ப பஜனை நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !