வியாஸராஜர் மடம் பீடாதிபதி வருகை
ADDED :2954 days ago
காஞ்சிபுரம்: ஸ்ரீவியாஸராஜர் மடத்தின் பீடாதிபதி, ஸ்ரீஸ்ரீ வித்யா ஸ்ரீஷ தீர்த்த ஸ்ரீபாதங்கள், நாளை காஞ்சிபுரம் வருகிறார்.இதுகுறித்து, வியாஸராஜ மடத்தின், மேலாளர், வி.குருராஜ் கூறியதாவது: கர்நாடகா மாநிலம், நரசிப்பூர் தாலுகாவில் உள்ள பன்னுார் கிராமத்தில், மத்வ அந்தணர் குடும்பத்தில் அவதரித்தவர் ஸ்ரீவியாஸராஜர்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், நான்காம் நாள் நடைபெறும், சேஷ வாகனத்தை சமர்பித்தவர். தற்போதைய, ஸ்ரீவியாஸராஜ மடத்து பீடாதிபதியாக உள்ள, ஸ்ரீ 1008 ஸ்ரீ வித்யா ஸ்ரீஷ தீர்த்தர் சுவாமிகள், நாளை (14ம் தேதி) காஞ்சிபுரம் வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.