காஞ்சி மஹா பெரியவர்ஆராதனை விழா துவக்கம்
ADDED :2866 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமத்தில், உலக நன்மை வேண்டி, வரும், 22வரை, காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை விழா மற்றும் அதி ருத்ர மஹா யாகம் நடக்கிறது. திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில் உள்ள மகான் சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில், உலக நன்மை வேண்டி, நேற்று முன்தினம், காஞ்சி மஹா பெரியவர் சந்திரசேகர் சுவாமிகள் ஆராதனை விழா மற்றும் அதி ருத்ர மஹாயாகம் துவங்கியது.நிறைவு நாளான வரும், 22ல், அதிருத்ர சத சண்டி ஹோம பூர்த்தி பூஜை, ருக்ஸ்மஹிதா ேஹாமம் பூர்த்தி, வசோர்த்தாரை, பூர்ணாஹதி, கலச அபிேஷகம் மற்றும் தீபாரதனை நடக்க உள்ளது.