உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு தயாராகிறது லட்சத்தி எட்டு வடை மாலை

கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு தயாராகிறது லட்சத்தி எட்டு வடை மாலை

திருச்சி: டிசம்பர் 17ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில், லட்சத்து எட்டு வடை தயாரிக்கும் பணி அதிவிமரிசையாக நடந்து வருகிறது.

பிரசித்தி பெற்ற கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும், மார்கழி அமாவாசையில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா, வரும், 17ல் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்வதற்காக லட்சத்தி எட்டு வடை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்த வருகிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று, சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்த பின், வடை மாலை சாற்றி, சிறப்பு வழிபாடு செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வடை வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !