பகவான் யோகி ராம்சுரத்குமார் அவதார தின சிறப்பு வழிபாடு
ADDED :2866 days ago
திருக்கோவிலுார்: திருவண்ணாமலை பகவான் யோகிராம்சுரத்குமார் சுவாமிகளின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, ேஹாமம் மற்றும் ஏகாதச ருத்ரபாராயணம் நடந்தது. திருவண்ணாமலை‚ பகவான் யோகிராம்சுரத்குமார் சுவாமிகள் கார்த்திகை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். சுவாமிகளின் அவதார தினத்தை முன்னிட்டு‚ நேற்று காலை ஆயுஷ்ஹோமம், ஆவஹந்தி ஹோமம், நட்சத்ர ஹோமம், நவக்ரஹ ஹோமம்‚ ஏகாதச ருத்ர பாராயணம் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தானத்தில் மகா அபிஷேகம்‚ சிறப்பு அலங்காரம் சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பகவானின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு ரிக் வேத மூல பாராயணம் இன்று துவங்குகிறது. வரும் 19ம் தேதிவரை தினசரி நாள்முழுவதும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜஸ்டிஸ் அருணாச்சலம் மற்றும் ஆஸ்ரம நிர்வாகிகள் செய்துள்ளனர்.