உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தாஸ்ரமத்தில் ராஜ அலங்காரத்தில் முருகன்

கந்தாஸ்ரமத்தில் ராஜ அலங்காரத்தில் முருகன்

சேலம்: பொன்விழாவையொட்டி, சேலம், உடையாப்பட்டி, கந்தாஸ்ரமத்தில், நேற்று காலை, 9:00 மணிக்கு சுப்ரமணிய பஞ்ச தஸாக் ஷரி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, முருகனுக்கு, ராஜ அலங்காரம் சார்த்துபடி செய்யப்பட்டது. மாலை நடந்த பூர்ணாஹூதியில், ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர். இன்று காலை, 9:00 மணிக்கு நவாக் ஷரி மூல மந்திரம், சண்டி ஹோமம், மாலை, 4:00 மணிக்கு சுக்ரவார பிரதோஷ பூஜை, 5:00 மணிக்கு சிறப்பு சங்கீர்த்தனம் நடக்கிறது. இரவு, தீபாராதனையுடன் விழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !