தீர்த்தீஸ்வரர் கோவிலில் 47ம் ஆண்டு அய்யப்பன் பூஜை
ADDED :2867 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், அய்யப்பன் சன்னதி உள்ளது. இங்கு, 47ம் ஆண்டு, அய்யப்பன் பூஜை மற்றும் விளக்கு பூஜை, 13ம் தேதி துவங்கியது. முதல் நாளன்று, 18 விளக்கு ஏற்றி வைத்து, விசேஷ அலங்காரத்தில் அய்யப்பனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது.நேற்று காலை, கணபதி பூஜை நடந்தது. பின், அய்யப்ப சுவாமி படத்துடன், பக்தர்கள் செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் இருந்து பஞ்ச வாத்தியத் துடன் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, உச்சி கால பூஜையும், சமபந்தி போஜனமும் நடந்தது. மாலை, 6:00 மணியளவில், அய்யப்பன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெருவில் பக்தர்கள் விளக்கு ஏந்தி, அய்யப்பனை வரவேற்று, பூஜை செய்து வழிபட்டனர்.