ஷீரடி சாய்பாபா நூற்றாண்டு சதுர்த்தி விழா
ADDED :2868 days ago
வாழப்பாடி: ஷீரடி சாய்விருட்சா அறக்கட்டளை சார்பில், வாழப்பாடி, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஷீரடி சாய்பாபா நூற்றாண்டு சதுர்த்தி விழா, நேற்று நடந்தது. அறக்கட்டளை நிர்வாகி புகழ் தலைமை வகித்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சாய்பாபா படத்துக்கு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.