கூடுதுறையில் ஐயப்ப பக்தர்களுக்கு ’ஷவர் பாத்’
ADDED :2955 days ago
பவானி: ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக, கூடுதுறை ஆற்றில், ’ஷவர் பாத்’ வசதி செய்யப்பட்டுள்ளது. பவானி, சங்கமேஸ்வரர் கோவில், தமிழக அளவில், பிரசித்தி பெற்ற பரிகார ஸ்தலமாக உள்ளது. மூன்று நதிகள் சங்கமிப்பதால், தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஓடும் காவிரியில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், புனித தீர்த்தம் எடுக்க வருகின்றனர். தற்போது ஐயப்ப கோவிலுக்கு செல்லும் வெளியூர், வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். காவிரி ஆற்றில், குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. இதனால் படித்துறை பகுதியில் தண்ணீர் தொட்டி மற்றும் ’ஷவர் பாத்’ வசதி செய்து, பக்தர்கள் குளிக்க, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.