யோகி ராம்சுரத்குமார் ஆராதனை விழா
ADDED :2868 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், யோகி ராம் சுரத்குமார் ஆராதனை விழா நேற்று நடந்தது. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த யோகிராம் சுரத்குமாரின், 99 வது ஆராதனை விழா, திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில் உள்ள அவரது ஆசிரமத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி, அபிஷேகம், ஆராதனை, யாகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.