உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு நகர அமைப்பு குழுமம் நோட்டீஸ்

வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு நகர அமைப்பு குழுமம் நோட்டீஸ்

புதுச்சேரி: நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் கட்டக் கூடாது என, நகர அமைப்பு குழுமம், வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு கடந்த 1998ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. தற்போது வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நடைபாதையை ஆக்கிரமித்து, வேதபுரீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் கடைகள் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கோவிலை பார்வையிட்ட நகர அமைப்பு குழும அதிகாரிகள், நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் கட்டக் கூடாது என, கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக புதுச்சேரி நகராட்சிக்கும் சுற்றிறிக்கை அனுப்பட்டுள்ளது.

கவர்னருக்கும் புகார்: வேதபுரீஸ்வர் கோவிலை புனரமைத்துள்ள போதிலும், புதுச்சேரி நகர அமைப்பு குழுமத்தியிடம் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது என, கவர்னர் கிரண்பேடிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !