சனீஸ்வர பகவான் சிலை காஞ்சியில் பிரதிஷ்டை
ADDED :2869 days ago
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், திரிபுரசுந்தரி உடனுறை பெரிய தம்பிரான் ஈஸ்வரன் கோவிலில், மணக்கோலத்தில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.சின்ன காஞ்சிபுரம், மிலிட்டரி ரோடு, திருவள்ளுவர் நகரில், திரிபுரசுந்தரி உடனுறை பெரிய தம்பிரான் ஈஸ்வரன் மற்றும் வேதவன்னீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், வரும், 19ம் நடைபெறவுள்ள சனி பெயர்ச்சியையொட்டி, சனீஸ்வர பகவான் சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம், இரவு, 7:00 மணிக்கு, சனீஸ்வர பகவான், விக்ரக கரிக்கோலம் நடந்தது.அதை தொடர்ந்து, நேற்று காலை, 7:30 மணிக்கு, சமேதராய் மணக்கோலத்தில், அருள்பாலிக்கும், மங்கள சனி பகவான் சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டது.அதை தொடர்ந்து, யாகவேள்வியும், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.