தஞ்சாவூரில் ரூ.3 கோடியில் எமன் கோவில்
ADDED :2870 days ago
தஞ்சாவூர்: தஞ்சை அருகே உள்ள, எமதர்மராஜன் கோவிலில், ஜன., 22ம் தேதி கும்பாபி ஷேகம் நடக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ளது
திருச்சிற்றம்பலம் கிராமம். இங்கு தேவர்கள், சிவபெருமானை வேண்டச் சென்ற போது,
அவர் நிஷ்டையில் இருந்தார். அச்சமயத்தில் மன்மதனை வரவழைத்து, சிவன் தவத்தை
கலைத்தனர்.
இதனால், கோபம் கொண்ட சிவன், மன்மதனை அழித்தார். பின், ரதிதேவியின் வேண்டுதலு க்காக மன்மதனை உயிர்ப்பித்தார். அப்போது, எமதர்மன், சிவனிடம், தனக்கு அழிக்கும் பணி கொடுத்திருக்கும் போது, அதை செய்ய தனக்கு உத்தரவிடும்படி வேண்டினார். சிவனும் அவருக்கு அருள்புரிந்தார். இதன் அடிப்படையில், பிற்காலத்தில், இவ்விடத்தில் எமதர்மனு க்கு கோவில் கட்டப்பட்டது. இவருக்கு அருள் செய்த சிவனுக்கு, சற்று தூரத்தில் தனிக் கோவில் உள்ளது.