உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகர்கோவிலில் குமார கோவிலுக்கு போலீசார் காவடி

நாகர்கோவிலில் குமார கோவிலுக்கு போலீசார் காவடி

நாகர்கோவில்: கார்த்திகை மாத கடைசி வெள்ளியான நேற்று, வேளிமலை குமார கோவிலு க்கு, போலீஸ்மற்றும் பொதுப்பணித் துறையினர் காவடி எடுத்துசென்றனர். கன்னியாகுமரி மாவட்டம், பண்டைய காலத்தில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது.

சிறிது காலம், பத்மனாபபுரம், இந்த சமஸ்தானத்தின்தலைநகராக விளங்கியது. இந்த காலத்தி ல், மன்னர் உத்தரவுப்படி,மக்களின் அமைதியான, -வளமான வாழ்க்கைக்காக, கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, போலீஸ் மற்றும் பொதுப்பணித் துறையினர் காவடி எடுத்து, வேளிமலை குமார கோவிலுக்கு செல்வர்.மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னரும், குமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைந்த பின்னரும், இந்த மரபை மறக்காமல், தொடர்ந்து காவடிஎடுப்பது

வழக்கம்.நேற்று காலை, தக்கலை போலீஸ் ஸ்டேஷன் மற்றும் பொதுப்பணித் துறை
அலுவலகத்தில் இருந்து, காவடி பவனி, மேளதாளத்துடன் புறப்பட்டு சென்றது. ஏராளமான போலீசாரும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !