உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமமலையில் டிச.26-ல் மண்டலபூஜை

சபரிமமலையில் டிச.26-ல் மண்டலபூஜை

சபரிமலை: சபரிமமலையில் 41 நாள் மண்டல காலத்தின் நிறைவை குறிக்கும் வகையில்
டிச., 26- காலை 11:00 மணிக்கு மண்டலபூஜை நடக்கிறது.

நவ.,16-ல் மண்டல காலம் தொடங்கியது. 41 நாள் மண்டல காலத்தின் நிறைவாக மண்டல பூஜை நடக்கும். டிச., 26- காலை 11:00 மணி முதல் 11:45க்குள் கும்ப ராசி முகூர்த்தத்தில் மண் டலபூஜை நடக்கிறது. இதற்கு முன் களபாபிஷேகம் நடக்கும்.

தொடர்ந்து சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். தங்க அங்கி டிச., 22-ல் ஆரன்முளா
பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டு, டிச.,25- மாலையில் சன்னிதானம் வரும்.  தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பெற்று சுவாமிக்கு அணிவித்து தீபாராதனை நடத்துவார்.

டிச., 26- இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின், மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச.,30- மாலை 5:00 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !