தர்மபுரியில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் பூஜை
தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் காலனி, மகாலிங்கேஸ்வரர் கோவி லில், மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.
கோவில் பிரகாரத்தில் உள்ள நந்தி பகவானுக்கு, பால், பண்ணீர், தேன், சந்தனம், குங்குமம்
இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதேபோல், தர்மபுரி
கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், ஹரி ஹரநாதசுவாமி கோவில்தெரு ராமலிங்க சவுடேஸ்வரர் கோவில், ஒட்டப்பட்டி ஆதி லிங் கேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில், காரிமங்கலம் அபித குஜலாம் பாள் சோமேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வன்னநாதர் கோவில், அரியகுளம் சொக்கநாதர் கோவில், அரசம்பட்டி சந்திர மவுலீஸ்வரர் கோவில், கடகத்தூர் பச்சேஸ்வரர் கோவில் உள்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது.