பனமரத்துப்பட்டியில் சனி பகவான் கோவிலில் 19ல் பரிகார பூஜை
ADDED :2954 days ago
பனமரத்துப்பட்டி: வரும், 19ல், விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு சனி பகவான்
பெயர்ச்சியாகிறார். அதையொட்டி, மல்லூர், கோட்டை மேடு பகுதியில் உள்ள சனிபகவான்
கோவிலில், அன்று சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் பரிகார பூஜை நடக்கிறது. ரிஷபம்,
மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ராசியினர், யாகத்தில் பங்கேற்று, பரிகார
பூஜை செய்துகொள்ளலாம் என, அர்ச்சகர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.