உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழப்பாடியில் அனுமன் ஜெயந்தி விழா

வாழப்பாடியில் அனுமன் ஜெயந்தி விழா

வாழப்பாடி: அனுமன் ஜெயந்திவிழா, வாழப்பாடி, வாசவி மஹாலில்,  ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

இதையொட்டி, காலை, 10:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா புறப்பட்டு, ராஜவீதி வழியாக ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேககம், அலங்காரம், மஹா தீபாராதனை நடக்கும். ஏற்பாடுகளை, வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சபா மற்றும் டிரஸ்ட் ஆகியோர் செய்து வருகின்றனர். அதேபோல், வாழப்பாடி, எட்டாவது வார்டில், ராஜகணபதி வீரபக்த ஆஞ்ச நேயர் கோவிலில், காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 10:00 மணிக்கு மஹா அபிஷேகம், மதியம், 1:00 மணிக்கு தீபாராதனை, அன்னதானம் வழங்குதல், மாலை, 5:00 மணிக்கு சுவாமி ஊர்வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !