உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் மார்கழி ஒன்று முதல் அதிகாலை 4 மணிக்கு நடைத்திறப்பு

பழநி கோயிலில் மார்கழி ஒன்று முதல் அதிகாலை 4 மணிக்கு நடைத்திறப்பு

பழநி:மார்கழி பிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் மலைக்கோயில்  (மார்கழி ஒன்று) முதல் தை 5 ( டிச,16 முதல் ஜன.,18 வரை) தினமும் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பழநிமுருகன் கோயிலுக்கு மார்கழி முதல்நாள் தொடங்கி பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருப்பர். தொடர்ந்து தைப்பூசத்திற்கு முன்னதாகவும், பின்னரும் பாதயாத்திரையாக லட்சக்கணக்கான பக்தர்கள் பழநி முருகன் கோயிலுக்கு வருகின்றனர்.

இவர்களின் வசதிக்காகவும், தனுர்மாத பூஜைக்காக மார்கழி மாதம் முழுதும் பழநி மலைக் கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.  மார்கழி மாதம் பிறப்பை முன்னி ட்டு, பழநி மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, காலை 4:30மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது.

அதனை தொடர்ந்து ஆனந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு யாகபூஜைகள் செய்து விநாயக ருக்கு வெள்ளிக்கவசம் சாத்தி தீபாராதனையும், சண்முகர், வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்படும்.இதேபோல மார்கழிமாதம் முழுவதும் தினசரி அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் அதனை தொடர்ந்து உச்சிக்காலம், சாயரட்சை, இராக்கால என ஆறுகால பூஜையில் முருகப்பெருமான் சாது, வேடர், பாலசுப்ரமணியர், வைதீகாள், ராஜஅலங்காரம், புஸ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை மேனகா செய்கின் றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !