திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயில் சுதர்சன ஹோமம்
ADDED :2895 days ago
மதுரை: மதுரை அருகே திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம் நடந்தது. இதையொட்டி அனுக்கை, புண்யாகவாஸனம், கும்ப பூஜை நடந்தன. தொடர்ந்து சுதர்சன, நரசிம்மர், சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோம பூர்ணாகுதி, அலங்கார திருமஞ்சனமும் நடந்தன. மாலை திருவாராதனம் நடந்தது. விழாக்குழு நிர்வாகி சூரியமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.