உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபத்ரகாளியம்மன் கோவில் குண்டம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்

வீரபத்ரகாளியம்மன் கோவில் குண்டம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்பூர்: திருப்பூர், மேட்டுப்பாளையம், ராமையா காலனி கொண்டத்து வீரபத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றினர்.

பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் ராமையா காலனி, கொண்டத்து வீரபத்ரகாளியம்மன் கோவிலின், 31வது ஆண்டு குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. தினமும், அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மாலை, குண்டம் ஏற்றும் நிகழ்ச்சியும், இன்று காலை, பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அம்மனுக்கு, புடவை மாலை, சிம்ம வாகனத்துக்கு கனி மாலையும் அணிவித்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். ஆண்கள், கைக்குழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள், திருநங்கையர் என ஏராளமானோர் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !