தேனி கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
தேனி ஸ்ரீராம் நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை கணபதி, மாருதி ஹோமம், மாருதி அஷ்சேத்திரம், 27 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. ஆஞ்சநேயர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். பெரியகுளம் பகுதியில் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழாவில்,அபிஷேகம், ஆராதனை நடந்தது. பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர் கோயிலில், காலை 5:00 மணி முதல் பூஜை நடந்தது. மூலவர் ஆஞ்சநேயருக்கு புதிததாக ரூ.3 லட்சம் மதிப்பிலான வெள்ளி அங்கி அணிவிக்கப்பட்டது. வடைமாலை சாத்தப்பட்டது. ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
* வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
* வடக்கு அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோயிலில் அபிஷேகம், ஆராதனை நடந்தது.
தாமரைக்குளம்: தாமரைக்குளம் வெங்கடாஜலபதி கோயிலில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டது. அபிஷேகம், ஆராதனை நடந்தது. லட்சுமிபுரம்: லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேவாரம்: அனுமன் ஜெயந்தியையொட்டி, அனுமந்தன்பட்டி ஹனுமந்தராயப்பெருமாள் கோயிலில் மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. இங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். டிச., 14ல் ஹோமத்துடன் அனுமன் ஜெயந்தி விழா துவங்கியது. அனைத்து சன்னதிகளிலும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய 40 குடம் பாலால் அபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர் சன்னதி பழங்களால் அலங்கரிக்கப்பட்டது. அனுமனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. பூந்தி, மாலாடு, மைசூர்பாகு, வடை, சர்க்கரை பொங்கல் படையலிடப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறங்காவலர் வெங்கட்ராமன் செய்திருந்தார்.
* தேவாரம் அரங்கநாதர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. மஞ்சள், பன்னீர், இளநீர், தயிர் அபிஷேகம் நடந்தது. வடை, சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட் டது.