உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் அனுமன் ஜெயந்தி; கோவிலில் பக்தர்கள் பரவசம்

திருப்பூர் அனுமன் ஜெயந்தி; கோவிலில் பக்தர்கள் பரவசம்

திருப்பூர்;ஸ்ரீ அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூரை சுற்றியுள்ள கோவில்களில், வடை மாலை உட்பட சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆஞ்சயநேயரை, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். ஸ்ரீ அனுமன் அவதரித்த தினமான நேற்று, அவரது ஜெயந்தி மகோத்சவம் பல கோவில்களில் கொண்டாடப்பட்டது. திருப்பூர், பார்க்ரோடு, ராகவேந்திர சுவாமி கோவில் வளா கத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலை, 6:45 மணிக்கு கோ பூஜை, கணபதி, நவக்கிரஹ ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து, வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் மற்றும் அர்ச்சனை, தீபாரா தனையும் நடைபெற்றது. தொடர்ந்து, லட்சுமி நரசிம்மர், சீதாராம ஆஞ்சநேயர் மற்றும் ராகவேந்திரருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

· திருப்பூர், சபாபதிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில், காலை, 6:00 மணிக்கு மங்கள இசையுடன் பூஜைகள் துவங்கியது. ஸ்ரீசீதாராம ஆஞ்ச நேய சுவாமிக்கு, பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. வடைமாலை, வெற்றிலை மாலை மற்றும் பல்வேறு புஷ்பங்களை அணிந்து, சிறப்பு அலங்காரத்தில் எருந்தருளிய ஆஞ்சநேயருக்கு, மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பிரசாதம் வழங்கப்பட்டது.

· திருப்பூர், பல்லடம் ரோடு, லட்சுமி நரசிம்மர், ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில், காலை, 7:00 மணி முதல் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 3 ஆயிரம் வடை, வெற்றிலைகளால் தொடுக்கப்பட்ட மாலைகளுடன், வெள்ளி கவசத்துடன் எருந்தருளிய ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள், துளசி மற்றும் வெண்ணெயை படைத்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
· அவிநாசி ஸ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில், ஹனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை, மங்கள இசையுடன், மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டது. மாலையில் நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ சீதா ராமர், ஸ்ரீ லட்சுமணருடன், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர், திருவீதியுலா சென்று, அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !