வன்னிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவம்
ADDED :2894 days ago
புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில், தீபத் திருவிழா மற்றும் அனுமன் ஜெயந்தி உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு 1,008 தீபத்திருவிழா நடந்தது. இதில், ஏரளமானோர் தீபம் ஏற்றி வழிபட்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (18ம் தேதி) காலை வெண்ணெய் காப்பு அலங்காரம், வடமாலை சாற்றுதல், இரவு 7:00 மணிக்கு ஆஞ்சநேயர் சாமி வீதியுலா புறப்பாடு நடக்கிறது.