அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு குரங்குகளுக்கு இனிப்பு வழங்கல்
ADDED :2894 days ago
குளித்தலை: அய்யர்மலையில், அனுமன் ஜெயந்தியையொட்டி, பக்தர்கள் குரங்களுக்கு, பழங்கள், உணவு பொருட்களை வழங்கினர்.
குளித்தலை அடுத்த, அய்யர்மலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரங்குள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூஜை சாமான்கள் கொண்டு செல்லும் போது, குரங்குகள் தாவி பொருட்களை பறித்துச் செல்வது வாடிக்கை. இதனால், மலையேறும் பக்தர்கள் பெரும்பாலும் கையில் குச்சியுடன் செல்வர். தினந்தோறும் குரங்குகளுக்கு உணவாக, பக்தர்கள் கொண்டுவரும் தேங்காய் மற்றும் பழங்கள், கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், அனுமன் ஜெயந்தியையொட்டி, குரங்குகளுக்கு பழங்கள், இனிப்பு, கார வகைகள், உணவுகளை பக்தர்கள் வழங்கினர். கோவிலில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.