உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமூர்த்திமலையில் அமாவாசை வழிபாடு

திருமூர்த்திமலையில் அமாவாசை வழிபாடு

உடுமலை: திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத அமாவாசையையொட்டி, திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். உடுமலை, திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பிரம்மா, சிவன், விஷ்ணு ஒருங்கிணைந்திருப்பது இக்கோவிலின் சிறப்பு அம்சம். மார்கழி மாத அமாவாசையையொட்டி, காலை, 6:00 மணி முதல், பிரம்மா, சிவன், விஷ்ணு சுவாமிகளுக்கு அபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தன. அமாவாசை சிறப்பு வழிபாட்டுடன் மகாதீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள், வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !