சபரிமலை உழவாரப்பணி: 100 மாணவர்கள் பயணம்
ADDED :2893 days ago
ப.வேலூர்: சபரிமலைக்கு உழவாரப்பணிகளை மேற்கொள்ள, கல்லூரி மாணவர்கள், 100 பேர் பயணம் மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்ட, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மூலம், ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, உழவாரப்பணி செய்ய ஆர்வமுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர். இந்த ஆண்டும், ப.வேலூரிலுள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த, 100 மாணவர்கள் பஸ் மூலம் ஐயப்பன் கோவிலுக்கு புறப்பட்டுச்சென்றனர். இவர்கள், சபரிமலையில், 10 நாட்கள் தங்கியிருந்து, பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தல், மலையேற உதவி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர். ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.