உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை நடக்குமா?

முத்தீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை நடக்குமா?

காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கோவிலில், இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி கிடைக்காததால் சனி பெயர்ச்சிக்கு, லட்சார்ச்சனை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காஞ்சிபுரத்தில், ஏகாலியர் மரபில் தோன்றிய, 63 நாயன்மார்களில் ஒருவரான திருக்குறிப்பு தொண்டருக்கு அருள்பாலித்து, முக்தி கொடுத்த, காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கோவிலில், சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவில், ஏகாலிய சமூகத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.இங்கு, 40 ஆண்டுகளாக சனி பெயர்ச்சியின்போது, லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம். அப்போது, இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்தாண்டு, சனி பெயர்ச்சியையொட்டி, லட்சார்ச்சனை நடத்த, இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி கிடைப்பதில் இழுபறி உள்ளது.விழாவிற்கு, சில நாட்களே உள்ள நிலையில், உடனே அனுமதி வழங்க வேண்டும் என,பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, கோவில் நடைமுறை நிர்வாகி வி.பாலு மேஸ்திரி கூறியதாவது:இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் லட்சார்ச்சனை நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !