பார்த்தசாரதி கோவிலில் இன்று பகல் பத்து உற்சவம்
ADDED :2888 days ago
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம் இன்று துவங்குகிறது. திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம், சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியான டிச., 29ம் தேதி, சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது.அதை முன்னிட்டு, திருமொழித் திருநாள் எனும் பகல் பத்து உற்சவம் இன்று துவங்குகிறது. உற்சவர் பத்து நாட்களும் சிறப்பு திருக்கோலத்தில் மாடவீதிகளை வலம் வந்து, அருள்பாலிக்கிறார்.