உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று கோவில்களை சுற்றி 40 கேமராக்கள் பொருத்தம்

மூன்று கோவில்களை சுற்றி 40 கேமராக்கள் பொருத்தம்

நங்கநல்லுார் : நங்கநல்லுாரில் உள்ள, பிரசித்தி பெற்ற மூன்று கோவில்கள் அமைந்துள்ள தெருக்களில், 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

சென்னை, நங்கநல்லுாரில், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, விஷேச நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும் போது, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதன் அருகிலேயே, குருவாயூரப்பன் கோவில், அய்யப்பன் கோவில்கள் உள்ளன.இந்த கோவில்களில், பக்தர்கள் அதிகளவில் கூடுவதால், இப்பகுதியில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. இதனால், கோவில்களைச் சுற்றியுள்ள, எட்டு தெருக்களில், கண்காணிப்பு கேமரா அமைக்க, போலீசார் முடிவு செய்தனர்.அதன்படி, நன்கொடையாளர்கள் உதவியுடன், 40 கண்காணிப்பு கேமராக்கள், அப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !