செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் சனிப்பெயர்ச்சி ஹோமம்
ADDED :2885 days ago
செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவில் சனிப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செல்லபிராட்டி லலிதாசெல்வாம்பிகை அம்மன் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இதை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு மலர் அலங்காரமும் செய்தனர். 9 மணிக்கு விசேஷ திரவியங்களால் சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு லலிதா சகஸ்ர நாம அர்ச்சனையும், சனி பரிகார ராசி தாரர்களுக்கு சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. பூஜைகளை ஈஸ்வரன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.