திருப்பரங்குன்றம் கோயில்களில் சனிப் பெயர்ச்சி பூஜைகள்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடந்தன.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் நவக்கிரகங்களுடன் எழுந்தருளியுள்ள சனி பகவான் முன்பு யாகசாலை அமைத்துஅனுக்ஞை, மகா சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக சாந்தி ஹோமம், சனீஸ்வர மூலமந்திரம் ஹோமம் முடிந்து அபிஷேக, ஆராதனை நடந்தது. திருநகர் மாகாலட்சுமி காலனி பெருந்தேவி தாயார் பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயிலில் இரண்டு நாட்கள் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு யாகம் முடிந்து சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரமானது. ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் தனி சன்னதியில் ஸ்வர்ண பைரவி ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம், பூஜைகள் முடிந்து ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ண்டியன் கல்யாண விநாயகர் கோயில் நிலாம்பாள் சனீஸ்வர பகவானுக்கு யாக பூஜைகள், மகா அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரமானது.