உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.2.5 லட்சம் பக்தர்கள் காணிக்கை

பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.2.5 லட்சம் பக்தர்கள் காணிக்கை

ஈரோடு: கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில், 2.5 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ஈரோடு, கள்ளுக்கடைமேடு, கொண்டத்து பத்ர காளியம்மன் கோவிலில், மூன்று உண்டியல்கள் உள்ளன. மூன்று மாதங்களுக்கு பிறகு, நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில், இரண்டு லட்சத்து, 42 ஆயிரத்து, 497 ரூபாய், 14 கிராம் தங்கம், 45.5 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோவில் பரம்பரை அறங்காவலர் தங்காயம்மாள், அறநிலையத்துறை உதவி ஆணையர் முருகையா, அறநிலையத்துறை ஆய்வாளர் பாலசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !