பொன்னம்பல சுவாமி குரு பூஜை விழா
ADDED :2863 days ago
செம்பாக்கம்:செம்பாக்கத்தில், பொன்னம்பல சுவாமியின் குருபூஜை விழா, நேற்று முன்தினம் நடந்தது.திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தில், புகழ்பெற்ற ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. பழமையை பெருமை சாற்றும் இக்கிராமத்தில், 30க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. சுமார், 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த, பொன்னம்பல சுவாமி மடம் உள்ளது. இதன் ஜீவசமாதியில், 41ம் ஆண்டு குருபூஜை விழா, நேற்றுநடந்தது.இதையொட்டி, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் தீப துாப ஆராதனை நடந்தது. சன்னதி எதிரில் உள்ள, தங்ககவசம் சார்த்தப்பட்ட நந்திக்கும், சிறப்பு ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.