உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்கரை வைகை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

தென்கரை வைகை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

காடுபட்டி, சோழவந்தான் தென்கரை வைகை ஆற்றில் ஐயப்பன் சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கி, 9:00 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி செண்டை மேளம் முழங்க யானை ஊர்வலத்தில் வந்து வைகையில் எழுந்தருளினார். சுவாமிக்கு சந்தனம், இளநீர், நெய் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் அபிஷேக, தீபாராதனை நடந்தன. அதையடுத்து ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பின்னர் சுவாமி ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை அனைத்து ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !