ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜனாதிபதி வழிபாடு
ADDED :2909 days ago
ராமநாதபுரம்: ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது மனைவி, மகளுடன் சாமி தரிசனம் செய்தார். கோயிலில் ஜனாதிபதிக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அவருடன் கவர்னர் பன்வாரிலாலும் உடன் வந்தார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோயிலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.