பகவதியம்மன் கோவிலில் இன்று தேர்த் திருவிழா
ADDED :2956 days ago
ப.வேலூர்: பகவதி அம்மன் கோவிலில், இன்று தேர்த் திருவிழா நடக்கவுள்ளது. ப.வேலூர், மேலத்தெரு பகவதியம்மனுக்கு, மார்கழி மாதத்தில் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 22ல் தொடங்கியது. காவிரியாற்றிலிருந்து கரகம் பாலித்து, காப்பு காட்டும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம், வடிசோறு மற்றும் மேளதாளங்கள் முழங்க, அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று இரவு, அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர். இன்று, தேர்த்திருவிழா, நாளை தீமிதி விழா, 28ல் பொங்கல் மாவிளக்கு, அம்மனை ஊஞ்சலில் அலங்கரித்து நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. 29ல் மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் மக்கள் செய்து வருகின்றனர்.