பெரியாண்டவர் கோவிலில் லட்சார்ச்சனை
ADDED :2842 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பெருமணம் பெரியாண்டவர் கோவிலில் லட்சார்ச்சனை நடந்தது. மார்கழி மாத பிறப்பை யொட்டி, பெரியாண்டவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு லட்சார்ச்சனை நடந்தது. இதையொட்டி பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. பின், மகா தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, சென்னை கிரி அய்யர், பெருமணம் ராஜா அய்யர், வத்சலா, சீனுவாச அய்யர், வைத்தி ஆகியோர் செய்தனர்.